முகப்பு
வணிகம்

குறைந்த விலையில் இரட்டை கேமராவுடன் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்!

ரெட்மி ஏ சீரிஸ் முதல்முறையாக இரட்டை கேமராக்களை கொண்டு ரெட்மி 8ஏ என சந்தையில் களமிறங்குகிறது. 

Updated On : 12 பிப்ரவரி, 2020 at 5:41 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:19 PM

ரெட்மி ஏ சீரிஸ் முதல்முறையாக இரட்டை கேமராக்களைக் கொண்டு 'ரெட்மி 8ஏ' என்ற பெயருடன் சந்தையில் களமிறங்குகிறது. 13 எம்.பி. முதன்மை சென்சார் மற்றும் 2 எம்.பி. கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 8 எம்.பி. கேமரா மூலம் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளைப் பெறலாம். ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி இருக்கிறது. 

6.2 இன்ச் டாட் நாட்ச் எச்டி + ஐபிஎஸ் டிஸ்ப்ளே திரை உள்ளது.  5,000 எம்ஏஎச் உயர் திறன் கொண்ட பேட்டரி மூலம் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் இயங்குகிறது. மேலும், 10 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் வசதியும், டைப்-சி போர்ட் வழியான சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. 

குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 ஆக்டா கோர் சிப்செட் மூலம் செயல்படுகிறது. 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 3 ஜிபி + 32 ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஆரம்ப விலை ரூ.6,499 அமேசான் மற்றும் எம்.ஐ டாட் காம் தளத்தில் கிடைக்கிறது. பிப்ரவரி 18 முதல் விரைவில் அனைத்து ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

Advertisement

இதேபோன்று, ரெட்மி பவர் பேங்க் 10,000 எம்ஏஎச் மற்றும் 20,000 எம்ஏஎச்  முறையே ரூ.799 மற்றும் ரூ.1,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.