முகப்பு
வணிகம்

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி!

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:20 PM
பகிர்:

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி) மெட்ரோ விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைனில் இலவச வைஃபை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் என்று அழைக்கப்படும் ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வியாழக்கிழமை இலவச வைஃபை பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக இந்தியாவில் முதல்முறையாக மெட்ரோ ரயில் நிலையத்தில் இலவச வைஃபை சேவை வழங்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை தில்லி பெற்றுள்ளது.

தற்போது முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வைஃபை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கொண்டு வரப்படும் என்று தில்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தில்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் மங்கு சிங், சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ நிலையத்தில் இதனை தொடங்கி வைத்தார். எக்ஸ்பிரஸ் நிலையங்களில் அனைத்து பயணிகளுக்கும் நெட்ஒர்க் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த வசதியை அனைத்து மெட்ரோ நிலையங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்துவதே எங்களது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →