வணிகம்

2020 மார்ச் மாதத்தில் ஹவாய் பி40 சீரிஸ் ஸ்மார்ட் போன் அறிமுகம்!

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஹவாய், வருகிற 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது.

DIN


சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஹவாய், வருகிற 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. விரைவில் அறிமுகமாகவிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் மூன்று வகைகள் இருக்கலாம் என்று தெரிகிறது.

ஹவாய் நிறுவனத்தில் இருந்து வெளியான தகவலில், இந்த மாடல்களில் ஒன்று போர்ஷே(Porsche) அல்லது மேக்ஸ்(MAX) சாதனமாக இருக்கலாம். கேமரா வடிவமைப்பு பி30 ப்ரோ மாடல் போல இருக்கக்கூடும். அதே நேரத்தில் மூன்றாவது பதிப்பில் கேமரா செவ்வக வடிவமைப்பைக் கொண்டிருக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கூகுளின் ஆண்ட்ராய்டுக்கு பதிலாக பி40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஹார்மனி ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலமாக இயங்கும் என்று ஹவாய் நிறுவனத்தின் நுகர்வோர் வணிகத் தலைவரான ரிச்சர்ட் யூ சமீபத்தில் தெரிவித்தார். ஹார்மனி ஓ.எஸ் இப்போது அனைத்து வகையான ஸ்மார்ட்போன்களுக்குத் தயாராக உள்ளது என்றும் கூறினார். 

மேலும், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) மற்றும் ரோபாட்டிக்ஸ் சம்மந்தப்பட்ட பிற நிறுவனங்களுக்கு ஹவாய் தனது கிரின் ப்ராசசரை(Kirin processors) விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ரிச்சர்ட் கூறினார்.

இந்நிறுவனம் சமீபத்தில் கிரின் 990 (5 ஜி)  ப்ராசசரை ஒருங்கிணைந்த 5 ஜி மோடமுடன் ஐ.எஃப்.ஏ(IFA) 2019 இல் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT