வணிகம்

மின்சார டாக்ஸிகளுக்கு வயர்லெஸ் மூலம் சார்ஜ்: இங்கிலாந்து அரசு முன்னோட்டம்

DIN


மின்சார டாக்ஸிகளுக்கு சார்ஜிங் மையங்களில் சார்ஜ் செலுத்தும் நடைமுறைக்குப் பதில் வயர்லெஸ் (Wireless) முறையில் சார்ஜ் செலுத்தும் புதிய நடைமுறைக்கான முன்னோட்டத்தில் இங்கிலாந்து அரசு இறங்கியுள்ளது.

இங்கிலாந்தில் மின்சார டாக்ஸிகள் பெட்ரோல் பங்க்கள் போல மின்சார சார்ஜிங் மையங்களில் வாகனங்களுக்கு சார்ஜ் செலுத்தி வருகின்றன. இதில், சில சமயங்களில் நிறைய வாகனங்கள் வரிசையில் நிற்கும் நிலையும், ஒரே சமயத்தில் பல வாகனங்களுக்கு சார்ஜிங் செய்ய முடியாத நிலையும் சிக்கலாக அமைகிறது. இதன் காரணமாக வயர்லெஸ் முறையில் சார்ஜிங் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைச் சார்ந்து செயல்பட இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இதன் 6 மாதகால முன்னோட்டமாக வயர்லெஸ் சார்ஜிங் முறைக்கான புதிய தொழில்நுட்பத்தில் 4.43 மில்லியன் அமெரிக்க டாலரை இங்கிலாந்து அரசு முதலீடு செய்துள்ளது. இதற்காக வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் பொறுத்தப்பட்டுள்ள 10 நிஸ்ஸான் மற்றும் எல்இவிசி மின்சார டாக்ஸிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஓட்டுநர்களிடம் இருந்தும் கட்டணம் வசூலிகப்படப்போவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் காலங்களில் மின்சார டாக்ஸிகளுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜ் செலுத்தும் வகையிலான தொழில்நுட்பத்தையே முற்றிலும் நடைமுறைப்படுத்துவதற்காக இங்கிலாந்து அரசு இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT