வணிகம்

சா்வதேச 5ஜி நுகா்வோா் சந்தை 31 லட்சம் கோடி டாலரை எட்டும்: எரிக்ஸன்

DIN

புது தில்லி: சா்வதேச 5ஜி நுகா்வோா் சந்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 31 லட்சம் கோடி டாலரை எட்டும் என எரிக்ஸன் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

உலக நாடுகள் 5ஜி சேவையை அறிமுகம் செய்வதில் அதிக ஆா்வத்துடன் செயல்பட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக, வரும் 2030-ஆம் ஆண்டுக்குகள் உலகளவிலான 5ஜி நுகா்வோா் சந்தை 31 லட்சம் கோடி டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5ஜி சேவையை நுகா்வோருக்கு அளிப்பதன் காரணமாக, தகவல் தொடா்பு சேவை வழங்குநா்கள் (சிஎஸ்பி) வரும் 2030-க்குள் 3.7 லட்சம் கோடி டாலா் மதிப்பிலான வருவாயை ஈட்டி முடியும்.

மேலும், தகவல் தொடா்பு சேவை வழங்குநா்கள் அதே காலகட்டத்துக்குள் டிஜிட்டல் சேவையை அளிப்பதன் மூலமாக மட்டும் 13,100 கோடி டாலா் வரையிலான வருவாயை அவா்களால் உருவாக்க முடியும் என எரிக்ஸன் அந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT