சிங்காரி செயலியில் முதலீடு செய்துள்ள சல்மான் கான்
டிக்-டாக் செயலியைப் போன்று சிறிய விடியோக்களை பதிவேற்றம் செய்யும் சிங்காரி செயலியில் நடிகர் சல்மான் கான் முதலீடு செய்துள்ளார்.
வணிகம்சிங்காரி செயலியில் முதலீடு செய்துள்ள சல்மான் கான்
டிக்-டாக் செயலியைப் போன்று சிறிய விடியோக்களை பதிவேற்றம் செய்யும் சிங்காரி செயலியில் நடிகர் சல்மான் கான் முதலீடு செய்துள்ளார்.
டிக்-டாக் செயலியைப் போன்று சிறிய விடியோக்களை பதிவேற்றம் செய்யும் சிங்காரி செயலியில் நடிகர் சல்மான் கான் முதலீடு செய்துள்ளார்.
மேலும் சிங்காரி செயலியின் விளம்பர தூதராகவும் சல்மான் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவைத் தளமாகக் கொண்ட தொலைத் தொடர்பு நிறுவனமான ஆன்மொபைல் சிங்காரி செயலியில் 95 கோடியை முதலீடு செய்துள்ளது.
ஆன்மொபைல் நிறுவனத்தின் மொபைல் விளையாட்டுகளை சிங்காரி செயலியுடன் ஒருங்கிணைந்து பயனர்களிடம் கொண்டுசெல்ல ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் பெறப்படும் தொகையின் மூலம் சிங்காரி செயலிக்கான உள்ளடங்கங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சிங்காரி செயலியின் பயனர்களின் எண்ணிக்கையை 56 மில்லியனிலிருந்து 100 மில்லியனாக உயர்த்த முடியும் என்று சிங்காரி செயலியின் தலைமை செயல் அதிகாரி சுமித் கோஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, ''முதலீட்டாளர்களில் ஒருவராகவும், விளம்பர துதராகவும் சல்மான் கான் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் கூட்டு செயல் மூலம் சிங்காரி செயலி உயரமான இடத்தை எட்டும் என்று நம்புகிறோம்'' என்று கூறினார்.
சல்மான் கான் இது தொடர்பாக பேசியதாவது, ''குறுகிய காலத்தில் சிங்காரி செயலி உருவாக்கி கொண்டுவரப்பட்டுள்ளது. கிராமம் மற்றும் நகர் புறங்களிலுள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்களது தனித்துவம் வாய்ந்த திறமைகளை இதன் மூலம் வெளிப்படுத்த இயலும்'' என்று தெரிவித்தார்.