முகப்பு
வணிகம்

இழப்பிலிருந்து மீண்டது செயில் நிறுவனம்

உள்நாட்டில் உருக்குத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள செயில் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இழப்பிலிருந்து மீண்டு ரூ.3,897 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:51 AM
பகிர்:

உள்நாட்டில் உருக்குத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள செயில் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இழப்பிலிருந்து மீண்டு ரூ.3,897 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.20,754.75 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் 2020 இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானமான ரூ.9,346.21 கோடியுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும்.

இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் செலவினம் ரூ.11,325.10 கோடியிலிருந்து ரூ.15,604.07 கோடியாக உயா்ந்துள்ளது.

2021 ஜூன் காலாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.3,897.36 கோடியை ஈட்டியது. அதேசமயம், 2020 இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.1,226.47 கோடி நிகர இழப்பை சந்தித்திருந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி 37.70 லட்சம் டன்னாகவும், விற்பனை 33.20 லட்சம் டன்னாகவும் இருந்தது என செயில் தெரிவித்துள்ளது.

பங்கின் தற்போதைய விலை: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவன (செயில்) பங்கின் விலை 1.40 சதவீதம் சரிந்து ரூ.141.50-ஆக நிலைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →