வணிகம்

நீண்ட நேரம் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவரா நீங்கள்?

DIN

பயனர்கள் நீண்ட நேரம் இன்ஸ்டாகிராம் செயலியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் பிரபலமான பொழுதுபோக்கு செயலியாக இன்ஸ்டாகிராம் உள்ளது. பல்வேறு நாடுகளிலும் இதன் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடி வருகிறது.

இன்ஸ்டாகிராம் செயலியானது அவ்வப்போது புதிய வசதிகளை பயனர்களின் பயன்பாட்டுக்கேற்ப அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நீண்ட நேரம் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் இடையிடையே சிறிது நேரம் இடைவேளை வழங்கும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நீண்ட நேரமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும்  பயனர் இடையே 10 முதல் 30 நிமிடங்கள் வரை இடைவேளை எடுத்துக் கொள்ளும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இதற்கான சோதனை ஓட்டத்தை இன்ஸ்டாகிராம் மேற்கொண்ட நிலையில் அதுகுறித்த தரவுகள் வெளியாகவில்லை. எனினும் இந்த புதிய அம்சத்தை 90 சதவிகித இளம்பருவத்தினர் பயன்பாட்டில் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகளில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் மேலும் பல நாடுகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT