முகப்பு
வணிகம்

20 கோடி ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை: ஸியோமி

ரெட்மி நோட் சீரிஸில் இதுவரை 20 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ததாக பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஸியோமி தெரிவித்துள்ளது.

Updated On : 9 பிப்ரவரி, 2021 at 12:48 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:59 AM

ரெட்மி நோட் சீரிஸில் இதுவரை 20 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ததாக பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஸியோமி தெரிவித்துள்ளது.

ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டும் இதுவரை 20 கோடிக்கும் அதிகமான யூனிட்டுகள் உலகளவில் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்கள் சாதனையின் மைல்கல் என்றும் ஸியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் எம்.ஐ10டி புரோ, ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9 புரோ, ரெட்மி 9, பிரைம் ரெட்மி 9, ரெட்மி 9ஏ போன்ற மாடல்கள் சேர்த்து 90 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகியுள்ளன. 

Advertisement

2020 ஆம் ஆண்டில்உலகளவில் 14.5 கோடி ஸ்மார்ட்போன்களை அனுப்பியுள்ள ஸியோமியின் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி ஆண்டுக்கு 31 சதவீதம் அதிகரித்து 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 4.3 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. சீனாவில் ஸியோமியின் ஏற்றுமதி 46 சதவீதம் அதிகரித்து 1.2 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில், ஸியோமி 2020 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டில் 13 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.