முகப்பு
வணிகம்

ஓலா மின்னணு ஸ்கூட்டர்: இயந்திரங்கள் மூலம் உற்பத்தி

மின்னணு இருசக்கர வாகனங்களைத் தயாரித்துவரும் ஓலா நிறுவனம், ரோபோடிக் இயந்திரங்களை உற்பத்தி பணிக்கு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:30 PM
ஓலா மின்னணு ஸ்கூட்டர்
பகிர்:


மின்னணு இருசக்கர வாகனங்களைத் தயாரித்துவரும் ஓலா நிறுவனம், ரோபோடிக் இயந்திரங்களை உற்பத்தி பணிக்கு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக ஓலா நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இயந்திரங்கள் மூலம் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் ரோபோடிக் மற்றும் தானியங்கி நிறுவனமான ஏபிபி உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
  
இருசக்கர வாகன தயாரிப்பில் மிகப்பெரிய தொழிற்சாலையாக அமையவுள்ள ஓலா நிறுவனத்தின் ஆலை அடுத்த மாத இறுதி முதல் இயங்கவுள்ளது.

தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் உள்பட, வெல்டிங், பெயிண்டிங் உள்ளிட்ட பணிகளுக்கும் முழுக்க முழுக்க ரோபோடிக் இயந்திரங்களையே பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.