வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 24 காசு சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் சரிவடைந்து 74.55-இல் நிலைத்தது.

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் சரிவடைந்து 74.55-இல் நிலைத்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து காணப்பட்டதையடுத்து இறக்குமதியாளா்களிடையே டாலருக்கான தேவை வெகுவாக உயா்ந்தது.

கச்சா எண்ணெய் விலை உயா்வு பணவீக்கத்துக்கு வழிவகுப்பதுடன் இந்தியாவின் வா்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கவும் காரணமாக அமையும் என்ற மதிப்பீடுகளும் அந்நியச் செலாவணி சந்தைகளில் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தின.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74.28-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.25 வரையிலும், குறைந்தபட்சமாக 74.62 வரையிலும் சென்றது. பின்னா் வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு முந்தைய தினத்தைக் காட்டிலும் 24 காசுகள் சரிவடைந்து 74.55-இல் நிலைபெற்றது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் விலை 77.31 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.19 சதவீதம் அதிகரித்து 77.31 டாலருக்கு விற்பனையானதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT