முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை 2-வது நாளாக சரிவுடன் நிறைவு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் இரண்டாவது நாளாக சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பங்குச்சந்தை 2-வது நாளாக சரிவுடன் நிறைவு
பகிர்:

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் இரண்டாவது நாளாக சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 354.89 புள்ளிகள் சரிந்து 52,198.51 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் 0.68 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 120.30 புள்ளிகள் சரிந்து 15,632.10 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.76 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 9 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் முடிவடைந்துள்ளன.

எஞ்சிய 21 நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. அதிகபட்சமாக இந்தஸ்இண்ட் 3.32 சதவிகிதமும், டாடா ஸ்டீல் 2.65 சதவிகிதமும், என்.டி.பி.சி. 2.39 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 2.31 சதவிகிதமும் சரிவுடன் காணப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →