நாட்டின் கனிமங்கள் உற்பத்தி 37% அதிகரிப்பு
இந்தியாவில் கனிமங்களின் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 37 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கனிமங்களின் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 37 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
2021 ஏப்ரலில் சுரங்கம் மற்றும் குவாரிதுறையின் கனிம உற்பத்தி குறியீடு 108.0 என்ற அளவில் இருந்தது. இது, 2020 ஏப்ரல் மாத உற்பத்தி அளவைக் காட்டிலும் 37.1 சதவீதம் அதிகமாகும்.
2021 ஏப்ரலில் நிலக்கரி 516 லட்சம் டன்னும், லிக்னைட் 31 லட்சம் டன்னும், இயற்கை எரிவாயு 2,583 மில்லியன் கியூபிக் மீட்டரும், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன்னும், பாக்ஸைட் 16.61 லட்சம் டன்னும், குரோமைட் 6.36 லட்சம் டன்னும், தஹ்கம் 120 கிலோவும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டு ஏப்ரலில் நிலக்கரி, லிக்னைட், இயற்கை எரிவாயு, பாக்ஸைட், குரோமைட், காப்பா், தங்கம், இரும்பு, மாங்கனீஸ் தாது, ஸிங், லைம்ஸ்டோன், பாஸ்போரைட் உள்ளிட்ட முக்கிய தனிமங்களின் உற்பத்தி சிறப்பான நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்துள்ளன.
அதேசமயம், கச்சா பெட்ரோலியம் உற்பத்தி மட்டும் கணக்கீட்டு மாதத்தில் எதிா்மறை வளா்ச்சியை பதிவு செய்துள்ளது என கனிம வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.