முகப்பு
வணிகம்

தங்கம் பவுன் ரூ.35,560

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.35,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
தங்கம் பவுன் ரூ.35,560
பகிர்:

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.35,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து, கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.35,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து, ரூ.4,445 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து,ரூ.73.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.73,400 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,445

1 பவுன் தங்கம்...............................35,560

1 கிராம் வெள்ளி.............................73.40

1 கிலோ வெள்ளி.............................73,400

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,450

1 பவுன் தங்கம்...............................35,600

1 கிராம் வெள்ளி.............................73.80

1 கிலோ வெள்ளி.............................73,800.

முழு கட்டுரையைப் படிக்க →