முகப்பு
வணிகம்

எஸ்ஜேவிஎன் லாபம் ரூ.620 கோடி

பொதுத் துறை மின் உற்பத்தி நிறுவனமான எஸ்ஜேவிஎன் நிறுவனம் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.619.92 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

பொதுத் துறை மின் உற்பத்தி நிறுவனமான எஸ்ஜேவிஎன் நிறுவனம் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.619.92 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை அளித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனம் வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த லாபமாக ரூ.619.92 கோடியை ஈட்டியுள்ளது. இது, நிறுவனம் முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.399.21 கோடியுடன் ஒப்பிடும்போது 55 சதவீதம் அதிகமாகும்.

இந்த காலகட்டத்தில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் ரூ.703.72 கோடியிலிருந்து ரூ.1,084.96 கோடியாக ஏற்றம் கண்டுள்ளது.

மேலும், நிறுவனத்தின் செலவினமும் ரூ.439.07 கோடியிலிருந்து ரூ.348.74 கோடியாக குறைந்து போனது.

டிவிடெண்ட்: கடந்த 2020-21 நிதியாண்டுக்கு ரூ.10 முகதிப்பு கொண்ட பங்கு ஒவ்வொன்றுக்கும் இறுதி டிவிடெண்டாக 0.40 காசுகள் வழங்கி நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளது என எஸ்ஜேவிஎன் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

சிம்லாவில் தலைமையகத்தை கொண்ட எஸ்ஜேவிஎன் நிறுவனம், மத்திய அரசு மற்றும் ஹிமாசலப் பிரதேச அரசின் கூட்டு நிறுவனமாகும்.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் எஸ்ஜேவிஎன் நிறுவனப் பங்கின் விலை 0.88 சதவீதம் உயா்ந்து ரூ.28.70-இல் நிலைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →