வணிகம்

ஜூலை 27-ல் 'நத்திங்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பான வயர்லஸ் இயர்பட்ஸ்

லண்டனைச் சேர்ந்த நத்திங் நிறுவனம் தனது முதல் தயாரிப்பான வயர்லஸ் இயர்பட்ஸை ஜூலை 27-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

DIN

லண்டனைச் சேர்ந்த நத்திங் நிறுவனம் தனது முதல் தயாரிப்பான வயர்லஸ் இயர்பட்ஸை ஜூலை 27-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

ஒன்-பிளஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரும், தொழில்முனைவோருமான கார்ல் பெய், நத்திங் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். அதன் மூலம் திறன் வாய்ந்த மின்னணு தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், நத்திங் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இயர்பட்ஸ் 
ஜூலை 27-ம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் அறிமுகமாகிறது.

இது குறித்து அந்நிறுவனத்தின் துணைத் தலைவரும் பொது மேலாளருமான  மனு ஷர்மா கூறியதாவது, ’’நத்திங் இயர் எனும் வயர்லஸ் இயர்பட்ஸை உலக சந்தையில் அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். முதல் தயாரிப்பு என்பதால் இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

இயர்போன் சந்தை மாற்றத்திற்காக ஏங்குகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் முதல் நாள் முதலே அதிக கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறோம்.

தற்போது எங்களது முதல் தயாரிப்பை அறிமுகம் செய்வதில் பெருமிதம் அடைகிறோம். ஜூலை 27-ம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் நத்திங் இயர்பட்ஸ் அறிமுகமாகும்.

சந்தைப்படுத்தும் முறையில், இந்திய இணைய வழி சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளோம்.

எங்கள் தயாரிப்பின் அனைத்து பொருள்களும் ஐரோப்பிய நாடுகளில் வடிவமைக்கப்படுகின்றன. வடிவமைப்பில் புதிய மொழியை அவர்கள் உருவாக்கியுள்ளது நத்திங் இயர்பட்ஸிலும் பிரதிபலித்துள்ளது. 

ஜூன் மாதமே இந்த இயர்பட்ஸ் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஒலி அமைப்பில் நுணுக்கங்களை மேம்படுத்தும் பணிகள் நிறைவடையாததால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜூலை 27-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம். நுகர்வோர் தொழில்நுட்ப சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்'' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT