முகப்பு
வணிகம்

வாரத்தின் கடைசியில் பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்

பங்குச்சந்தை வணிகம் இன்று (மார்ச் 26) உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 475 புள்ளிகள் வரை உயர்ந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
கோப்புப்படம்
பகிர்:

பங்குச்சந்தை வணிகம் இன்று (மார்ச் 26) உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 475 புள்ளிகள் வரை உயர்ந்தது.

பங்குச்சந்தை வணிகம் கடந்த சில நாள்களாக சரிவுடன் தொடங்கிய நிலையில் இன்று உயர்ந்துள்ளது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 475 புள்ளிகள் உயர்ந்து 48,896 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.94 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 152.05 புள்ளிகள் சரிந்து 14,499.35 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.22 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல்தர பங்குகளில், 28 நிறுவனங்களின் பங்குகள் நேர்மறையாக இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கின.

அதிகபட்சமாக பஜாஜ் பின்சர்வ் 4.05 சதவிகிதமும், டைட்டன் கம்பெனி 2.60 சதவிகிதமும், ஏஸியன் பெயின்ட்ஸ் 2.48 சதவிகிதமும், பஜாஜ் பைனான்ஸ் 2.30 சதவிகிதமும் உயர்ந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →