முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் மேலும் 566 புள்ளிகள் வீழ்ச்சி

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் எதிர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 566 புள்ளிகளை இழந்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:54 AM
மீண்டும் 60,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்
பகிர்:

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் எதிர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 566 புள்ளிகளை இழந்தது.
 அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் ஆளுநரின் கருத்துகள், வங்கி வட்டி விகித உயர்வு பற்றிய எதிர்பார்ப்புகளை தூண்டியதும், வெள்ளை மாளிகை ரஷியா மீது கூடுதல் தடைகளை அறிவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதும் முதலீட்டாளர்களின் உணர்வை பெரிதும் பாதித்தன. இதைத் தொடர்ந்து உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிர்மறையாக இருந்தன. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது.
 தொடர்ந்து இரண்டாவது நாளாக எச்டிஎஃப்சி குழுமப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்ததால், முக்கிய குறியீடுகள் இழப்பை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாகக் குறைந்ததே சரிவுக்கு முக்கியக் காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 2,142 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,512 நிறுவனப் பங்குகளில் 1,277 பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தன. 2,142 பங்குகள் ஆதாயம் பெற்றன. 93 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 183 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 9 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.16 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.273.58 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.19 கோடியாக உயர்ந்துள்ளது.
 2-ஆவது நாளாக வீழ்ச்சி:
 சென்செக்ஸ் காலையில் பலவீனத்துடன் 360.80 புள்ளிகள் குறைந்து 59,815.71-இல் தொடங்கி, அதிகபட்சமாக 59,941.57 வரை உயர்ந்தது. பின்னர், 59,509.84 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 566.09 புள்ளிகளை (0.94 சதவீதம்) இழந்து 59,610.41-இல் நிறைவடைந்தது. தொடக்கம் முதல் சந்தையில் கரடியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, சென்செக்ஸ் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் சரிவைச் சந்தித்தது.
 எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகள் விலை சரிவு:
 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 10 நிறுவனப் பங்குகள் ஆதாயம் பெற்றன. 20 பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன.
 இதில் எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி ஆகிய இரண்டும் இரண்டாவது நாளாக கடும் விற்பனையை எதிர்கொண்டன.
 இதனால், 3.50 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டாக்டர் ரெட்டீஸ் லேப், எம் அண்ட் எம், விப்ரோ ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ், இன்டஸ்இண்ட் பேங்க், மாருதி சுஸுகி, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலுக்கு வந்தன.

என்டிபிசி மேலும் முன்னேற்றம்:
 அதே சமயம், பொதுத் துறை மின் நிறுவனமான என்டிபிசி இரண்டாவது நாளாக 2.61 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டாடா ஸ்டீல், பவர் கிரிட், பார்தி ஏர்டெல், நெஸ்லே, எல் அண்ட் டி மற்றும் எஸ்பிஐ உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன.
 நிஃப்டி 150 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 1,197 பங்குகள் ஆதாயம் பெற்றன. 725 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 30 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 149.75 புள்ளிகளை (0.83 சதவீதம்) இழந்து 17,807.65-இல் நிறைவடைந்தது. காலையில் 114.65 புள்ளிகள் குறைந்து 17,842.75-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,901.00 வரை உயர்ந்தது. பின்னர்,17,779.85 வரை கீழே சென்றது.
 பேங்க் குறியீடு வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், ஐடி குறியீடுகள் 1.20 முதல் 1.70 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.
 பார்மா, ஹெல்த்கேர், ஆட்டோ குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதேசமயம் மெட்டல் குறியீடு 1.35 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 1.99 சதவீதம் உயர்ந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →