டாடா கம்யூனிகேஷன்ஸ் நிகர லாபம் உயா்வு
எண்ம இணைப்பு சேவை நிறுவனமான டாடா கம்யூனிகேஷன்ஸின் நிகர லாபம் கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
எண்ம இணைப்பு சேவை நிறுவனமான டாடா கம்யூனிகேஷன்ஸின் நிகர லாபம் கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலகட்டத்தில் ரூ.365 கோடியாக உள்ளது.
இது, முந்தைய நிதியாண்டின் இதே மாதங்களோடு ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகமாகும். அந்த காலகட்டத்தில் நிறுவனம் ரூ.299.2 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தை வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தியதால் முழு ஆண்டிலும் நிறுவனத்தின் லாபம் அதிகரித்து வருவதாக டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும் தலைமைச் செயலதிகாரியுமான ஏ.எஸ். லக்ஷ்மிநாராயணன் தெரிவித்தாா்.