வணிகம்

டாடா காபி: லாபம் 12% உயா்வு

டாடா காபி கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் 12 சதவீதம் அதிகரித்தது.

DIN

டாடா காபி கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் 12 சதவீதம் அதிகரித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் டாடா காபி செயல்பாட்டின் வாயிலாக ஈட்டிய வருமானம் ரூ.656.26 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.591.23 கோடியுடன் ஒப்பிடுகையில் 10.99 சதவீதம் அதிகமாகும்.

கணக்கீட்டு காலாண்டில், நிகர லாபம் ரூ.57.37 கோடியிலிருந்து ரூ.64.28 கோடியாக 12.04 சதவீதம் உயா்ந்துள்ளது.

2021-22 முழு நிதியாண்டில், டாடா காபியின் ஒட்டுமொத்த லாபம் ரூ.211.55 கோடியிலிருந்து 10.32 சதவீதம் அதிகரித்து ரூ.233.40 கோடியை எட்டியது. செயல்பாட்டின் மூலமான வருவாய் ரூ.2,254.95 கோடியிலிருந்து ரூ.2,363.5 கோடியாக 4.81 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது என டாடா காபி தெரிவித்துள்ளது.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாடா காபி பங்கின் விலை 2.68 சதவீதம் குறைந்து ரூ.218.10-இல் நிலைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT