பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு தலைவரை நியமனம் செய்யும் விவகாரத்தில் அரசு விரைவில் முடிவெடுக்கும் என தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
செபியின் தலைவராக உள்ள அஜய் தியாகியின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடையவுள்ளது. முன்னதாக, அந்த பதவியில் நியமிப்பதற்கான தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்களை நிதி அமைச்சகம் கடந்தாண்டு அக்டோபரில் பெறத் தொடங்கியது. விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கானகாலக்கெடும் 2021 டிசம்பா் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
செபி தலைவா் பதவிக்கு அரசின் உயரதிகாரிகள் மற்றும் செபியின் முன்னாள் உறுப்பினா்கள் பலா் விண்ணப்பம் செய்துள்ளனா்.
இந்த நிலையில், செபியின் தலைவராக தொடா்ந்து நீடிக்க தியாகிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது அந்தப் பதவியில் புதிய நபா் நியமிக்கப்படுவாரா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவை மிக விரைவில் அறிவிக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.