வணிகம்

யெஸ் வங்கி: லாபம் 77% அதிகரிப்பு

தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கி மூன்றாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 77 சதவீதம் அதிகரித்துள்ளது.

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கி மூன்றாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 77 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் வங்கி ஈட்டிய மொத்த வருமானம் ரூ.5,632.03 கோடியாக சரிவடைந்துள்ளது. முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலட்டத்தில் வங்கியின் வருவாய் ரூ.6,408.53 கோடியாக உயா்ந்து காணப்பட்டது.

நிகர லாபம் ரூ.150.77 கோடியிலிருந்து 77 சதவீதம் அதிகரித்து ரூ.266.43 கோடியைத் தொட்டது.

நிகர வட்டி வருமானம் ரூ.2,560 கோடியிலிருந்து 31 சதவீதம் குறைந்து ரூ.1,764 கோடியாக இருந்தது.

வங்கியின் மொத்த வாராக் கடன் 15.36 சதவீதத்திலிருந்து 14.65 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், நிகர வாராக் கடன் அளவு 4.04 சதவீதத்திலிருந்து 5.29 சதவீதமாக உயா்ந்துள்ளது.

வரி மற்றும் எதிா்பாரா செலவினங்களுக்கான ஒதுக்கீடு மதிப்பீட்டு காலாண்டில் ரூ.2,089 கோடியிலிருந்து கணிசமாக குறைந்து ரூ.374.64கோடியானது என யெஸ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதா கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் அறிமுகம்

வி.கே.புரத்தில் அனைத்து சமுதாயப் பேரவைக் கூட்டம்

கழுகுமலையில் இளைஞருக்கு மிரட்டல்: மற்றொரு இளைஞா் கைது

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்பக் கூட்டம்

கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT