முகப்பு
வணிகம்

இந்திய தொழிலக உற்பத்தி 19.6% வளா்ச்சி

இந்திய தொழிலக உற்பத்தி நிகழாண்டு மே மாத்தில் 19.6 சதவீதம் என்ற அளவில் வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:56 AM
பகிர்:

இந்திய தொழிலக உற்பத்தி நிகழாண்டு மே மாத்தில் 19.6 சதவீதம் என்ற அளவில் வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. இது, கடந்த ஓராண்டில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.

இதுகுறித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது: உற்பத்தி, மின்சாரம் மற்றும் சுரங்கத் துறைகளின் சிறப்பான செயல்பாட்டினையடுத்து நிகழ் 2022-ஆம் ஆண்டின் மே மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தி 19.6 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. இது, கடந்த ஓராண்டில் காணப்படாத அதிகபட்ச அளவாகும். 2021 மே மாதத்தில் இந்த வளா்ச்சி விகிதம் 27.6 சதவீதமாக காணப்பட்டது.

உற்பத்தி துறை கடந்த ஆண்டில் 32.1 சதவீத வளா்ச்சியை பதிவு செய்த நிலையில், நடப்பாண்டு மே மாதத்தில் 20.6 சதவீத வளா்ச்சியை பெற்றது. மேலும், மின்சார துறையின் வளா்ச்சி விகிதம் 7.5 சதவீதத்திலிருந்து 23.5 சதவீதமாகவும், சுரங்கத் துறையின் உற்பத்தி 23.6 சதவீதத்திலிருந்து 10.9 சதவீதமாகவும் இருந்தன.

நிகழாண்டு ஏப்ரல்-மே மாதங்களுக்கு இடையில் இந்திய தொழிலக உற்பத்தி 12.9 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. இது, கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 67.3 சதவீதமாக இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →