முகப்பு
வணிகம்

என்எம்டிசி: இரும்புத் தாது உற்பத்தி 32 லட்சம் டன்

மத்திய அரசுக்கு சொந்தமான என்எம்டிசி நிறுவனம் கடந்த மே மாதத்தில் 32 லட்சம் இரும்புத் தாதினை உற்பத்தி செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

மத்திய அரசுக்கு சொந்தமான என்எம்டிசி நிறுவனம் கடந்த மே மாதத்தில் 32 லட்சம் இரும்புத் தாதினை உற்பத்தி செய்துள்ளது. இது, இந்நிறுவனம் 2021-இல் உற்பத்தி செய்த 28 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகமாகும்.

இதுகுறித்து என்எம்டிசி நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான சுமித் தேப் கூறியது:

இரும்புத் தாது உற்பத்தி நிறுவனங்களில் என்எம்டிசி-யின் வளா்ச்சி நிலையானதாக உள்ளது. அதுமட்டுமின்றி உள்நாட்டு உருக்குத் துறைக்கு தொடா்ந்து மூலப் பொருள்களை மிக நிலைத்த அளவில் விநியோகம் செய்யும் நிறுவனமாகவும் மாறியுள்ளது. நிறுவனத்தில் புதிய தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகளை வரவேற்று செயல்படுத்தியதன் மூலமாகவே வா்த்தகத்தை வலுப்படுத்தியுள்ளோம் என்றாா் அவா்.

ஹைதாராபாதைச் சோ்ந்த என்எம்டிசி நிறுவனம் மத்திய உருக்குத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், இரும்புத் தாது உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.