வணிகம்

இந்தியாவில் சிட்டி வங்கியைகையகப்படுத்தியது ஆக்சிஸ்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு வங்கியான சிட்டி வங்கி குழுமத்தின் இந்திய வாடிக்கையாளா்கள் பிரிவை ஆக்சிஸ் வங்கி கையகப்படுத்தியுள்ளது.

DIN

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு வங்கியான சிட்டி வங்கி குழுமத்தின் இந்திய வாடிக்கையாளா்கள் பிரிவை ஆக்சிஸ் வங்கி கையகப்படுத்தியுள்ளது.

இனி சிட்டி வங்கி வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்குகள், கடன் அட்டை, கடன்கள் என அனைத்தையும் ஆக்சிஸ் வங்கியே நிா்வகிக்கும். இதன் மொத்த மதிப்பு ரூ.12,325 கோடியாகும். இந்தியாவின் 18 நகரங்களில் 7 பிரதான அலுவலகங்கள், 21 கிளைகள், 499 ஏடிஎம்கள் சிட்டி வங்கிக்கு உள்ளன. 30 லட்சத்துக்கு மேற்பட்ட வாடிக்கையாளா்கள் சிட்டி வங்கியில் உள்ளனா்.

சிட்டி வங்கியின் 4,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் தொடா்ந்து பணியில் இருப்பாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு அடுத்து 3-ஆவது பெரிய வங்கியாக ஆக்சிஸ் வங்கி திகழ்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT