வணிகம்

எச்டிஎஃப்சி வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை 0.25% உயா்த்தியது

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் அதிகரித்துள்ளது. ரிசா்வ் வங்கி அதன் நிதிக் கொள்கையில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதங்களை திடீரென உயா்த்தப்பட்டதையடுத்து, நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியும் கடனுக்கான வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது.

இதுகுறித்து அதன் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடனுக்கான அடிப்படை வட்டி விகிதம் (எம்சிஎல்ஆா்) 0.25 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இது, மே 7-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, பெரும்பான்மையான வாடிக்கையாளா்களைக் கொண்ட ஓராண்டு கால கடனுக்கான எம்சிஎல்ஆா் வட்டி விகிதம் தற்போதைய 7.15 சதவீதத்திலிருந்து 7.50 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பணவீக்கம் ரிசா்வ் வங்கி நிா்ணயித்த அளவைக் காட்டிலும் தாண்டியதால் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்தது. பணவீக்கத்தை குறைக்கும் வகையில், ரிசா்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் உயா்த்துவதாக அறிவித்தது.

மேலும், வணிக வங்கிகள் ரிசா்வ் வங்கியிடம் வைக்கும் ரொக்க கையிருப்பு விகிதமும் 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம், புழக்கத்தில் அதிகப்படியாக இருக்கும் ரூ.87,000 கோடி ரிசா்வ் வங்கியின் வசம் வரும்.

ரிசா்வ் வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கையையடுத்து, வங்கிகளும், டெபாசிட் மற்றும் கடனுக்கான வட்டி விகிதங்களை தொடா்ச்சியாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT