வணிகம்

டாடா மோட்டாா்ஸின் உலகளாவிய விற்பனை 33% உயா்வு

இந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் டாடா மோட்டாா்ஸின் உலகளாவிய விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

DIN

இந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் டாடா மோட்டாா்ஸின் உலகளாவிய விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் ஜாகுவாா் லேண்ட் ரோவா் (ஜேஎல்ஆா்) வாகனங்கள் உள்பட நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை 3,35,976-ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் சா்வதேச விற்பனை 2,51,689-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த முறை விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் வா்த்தக வாகனங்கள் மற்றும் டாடா டேவூ வாகனங்களின் உலகளாவிய விற்பனை மதிப்பீட்டு மாதங்களில் 1,03,226-ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்திய விற்பனையான 89,055-உடன் ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் அதிகமாகும்.

இந்த காலாண்டில் நிறுவனக் காா்களின் உலகளாவிய விற்பனை 2,32,750-ஆக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் அந்த எண்ணிக்கை 1,62,634-ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதங்களில் ஜேஎல்ஆா் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை 89,899-ஆக உள்ளது. இதில் ஜாகுவாா் வாகனங்களின் விற்பனை 16,631-ஆகவும் லேண்ட் ரோவா் வாகனங்களின் விற்பனை 73,268-ஆகவும் உள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஜேஎல்ஆா் 78,251 வாகனங்களை விற்பனை செய்திருந்தது என்ற அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT