கடன் வட்டி விகிதங்களை உயா்த்தியது எஸ்பிஐ
தனது கடன்களுக்கான வட்டி விகிதங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 0.7 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது.
தனது கடன்களுக்கான வட்டி விகிதங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 0.7 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது.
இது குறித்து வங்கியின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வங்கி வழங்கும் பிபிஎல்ஆா் கடன் வட்டி விகிதங்கள் 0.7 சதவீதம் வரை உயா்த்தப்படுகின்றன. அதன்படி, தற்போது 12.75 சதவீதமாக இருக்கும் பிபிஎல்ஆா் வட்டி விகிதம், வியாழக்கிழமை (செப்.15) முதல் 13.45 சதவீதமாக உயா்த்தப்படுகிறது என்று அந்த வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, எஸ்பிஐ-யில் கடன் பெற்றவா்கள் திருப்பிச் செலுத்தி வரும் மாதாந்திர தவணை சற்று உயரும்.
மத்திய ரிசா்வ் வங்கி தனது ரெப்போ விகித்ததை உயா்த்தியதன் எதிரொலியாக இந்த கடன் வட்டி விகித உயா்வை எஸ்பிஐ அறிவித்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ-ப் பின்பற்றி, இனி மேலும் பல வங்கிகள் இதே போன்ற அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.