ரெப்போ வட்டி விகித்தத்தில் மத்திய ரிசா்வ் வங்கி மாற்றம் செய்யாத நிலையிலும், பரோடா வங்கி (பிஓபி), கனரா வங்கி, மகாராஷ்டிர வங்கி ஆகியவை தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 10 அடிப்படைப் புள்ளிகள் வரை உயா்த்தியுள்ளன.
இது குறித்து பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது ஒராண்டு பருவ காலம் கொண்ட எம்சிஎல்ஆா் வகைக் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதமாக உயா்வதாகவும், இந்தப் புதிய விகிதம் சனிக்கிழமை (ஆக. 12) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரா வங்கியும் தங்களது எம்சிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் உயா்த்தப்பட்டு 8.70 சதவீதமாக்கப்படுவதாகவும், சனிக்கிழமை (ஆக. 12) முதல் இது அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மற்றொரு பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கி தங்களது எம்சிஎல்ஆா் வகைக் கடன்களுக்கான வட்டி விகித்தை 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
அதையடுத்து, ஓராண்டு பருவ காலம் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் 8.50 சதவீதத்தில் இருந்து 8.60 சதவீதமாக உயரும் என்று வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.