வணிகம்

110% வளா்ச்சி கண்ட யூகோ வங்கியின் லாபம்

பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 110 சதவீதம் உயா்ந்துள்ளது.

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 110 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2022 அக்டோபா்-டிசம்பா்) வங்கியின் நிகர லாபம் ரூ.653 கோடியாக உள்ளது.

இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 110 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.310 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,451 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.4,639 கோடியாக இருந்தது.

அப்போது ரூ.3,919 கோடியாக இருந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் தற்போது ரூ.4,627 கோடியாக அதிகரித்துள்ளது.

வங்கியின் நிகர வாராக் கடன் கடந்த 2021 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் 2.81 சதவீதமாக இருந்து. அது 2022-ஆம் ஆண்டின் அதே மாதங்களில் 1.66 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT