மேம்படுத்தப்பட்ட 2023 செல்டோஸ் கார் அறிமுகம் செய்தது கியா
உள்நாட்டு பயணிகள் வாகன பிரிவில் 10 சதவீத சந்தைப் பங்கைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட கியா இந்தியா இன்று அதன் ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனமான செல்டோஸின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு பயணிகள் வாகன பிரிவில் 10 சதவீத சந்தைப் பங்கை பெறுவதை நோக்கமாகக் கொண்ட கியா இந்தியா இன்று அதன் நடுத்தர அளவிலான ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனமான 2023 செல்டோஸின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்தது.
தற்போது உள்நாட்டு சந்தையில் சுமார் 7 சதவீத சந்தைப் பங்கை கொண்டுள்ள ஆட்டோமொபைல் நிறுவனமான கியா, விற்பனை நெட்வொர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
விரைவில் 10 சதவீத சந்தைப் பங்கை அடைய வேண்டும் என்ற இலக்கை அடைய இந்த ஃபேஸ்லிஃப்ட் வெளியீடு மிகவும் முக்கியமானது என்றார் கியா இந்தியா நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டே-ஜின் பார்க்.
செல்டோஸ் இன்டிரியர் அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட டாஷ்போர்டு டிசைன் வழங்கப்பட்டு புதிய இரட்டை பிரிவு கொண்ட டிஸ்பிளே அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
செல்டோஸ் பிராண்ட் தற்போது கியா இந்தியாவின் ஒட்டுமொத்த விற்பனையில் 55 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. அதே வேளையில் உலகளவில் விற்கப்படும் ஒவ்வொரு பத்து கியா கார்களிலும் ஒன்று செல்டோஸ் ஆகும்.