ரூ.44,000-க்கும் கீழ் சென்ற தங்கம் விலை
சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,000-க்கும் கீழ் குறைந்தது.
சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,000-க்கும் கீழ் குறைந்தது.
சென்னையில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை நிலவரப்படி கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,485-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,880-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ரூ.75-க்கும், ஒரு கிலோ(கட்டி வெள்ளி) ரூ.1,500 குறைந்து ரூ.75,000-க்கும் விற்பனையானது.