ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் சித்காரா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவர் 2023 ஆகஸ்ட் மூன்றாவது வாரம் வரை நிறுவனத்தை வழிநடத்துவார் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாணி வெங்கடேஷ் தலைமையிலான உலகளாவிய வணிகம், கணேஷ் லட்சுமிநாராயணன் தலைமையிலான உள்நாட்டு வணிகம் மற்றும் ஆஷிஷ் அரோரா தலைமையிலான நெக்ஸ்ட்ரா டேட்டா சென்டர்கள் என மூன்று வணிக மற்றும் சேனல் பிரிவுகளாக டெலிகாம் செயல்படும் என்று ஏர்டெல் தனது ஒழுங்குமுறை தாக்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் குறித்து பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கோபால் விட்டல் கூறுகையில், வணிகத்தை அதிகரிக்க உதவ வாணி, கணேஷ் மற்றும் ஆஷிஷ் ஆகியோருடன் நெருக்கமாக பணியாற்ற நான் காத்திருக்கிறேன். அஜய்யின் பங்களிப்புகளையும் நான் அங்கீகரிக்க விரும்புகிறேன். ஏர்டெல் உடனான தனது 23 நீண்ட ஆண்டுகளில் அஜய் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகிறேன் என்றார்.
இதற்கிடையில் இன்று பார்தி ஏர்டெல் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 0.52 சதவீதம் குறைந்து ரூ.851.80 ஆக முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.