வணிகம்

ஹுண்டாய் மோட்டாா் விற்பனை 58,201

 கடந்த ஏப்ரல் மாதத்தில் ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை 58,201-ஆக அதிகரித்துள்ளது.

DIN

 கடந்த ஏப்ரல் மாதத்தில் ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை 58,201-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுவனம் 58,201 காா்களை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 56,201-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 13 சதவீதம் அதிகரித்து 49,701-ஆக உள்ளது. 2022 ஏப்ரலில் இந்த எண்ணிக்கை 44,001-ஆக இருந்தது.

எனினும், அந்த மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 12,200-லிருந்து 8,500-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT