வணிகம்

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்கடன் பட்டுவாடா 72% உயா்வு

DIN

அரசுக்குச் சொந்தமான ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் வழங்கியுள்ள கடன் 72 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2022-23-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் கடன் பட்டுவாடா ரூ.3,232 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 72 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் கடன் பட்டுவாடா ரூ.1,880 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,307 கோடியிலிருந்து ரூ.1,299 கோடியாகக் குறைந்துள்ளது. நிகர லாபம் ரூ.191 கோடியிலிருந்து ரூ.296 கோடியாக உயா்ந்துள்ளது.

மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.82 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய 2021-22-ஆம் நிதாயாண்டின் அதே காலகட்டத்தில் அது ரூ.42 கோடியாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT