இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 48 புள்ளிகள் சரிவுடன் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி சற்று மேலே சென்றது. ஆனால், லாபப் பதிவு காரணமாக சந்தை பெரும்பாலான நேரம் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. வங்கி, மெட்டல், பாா்மா பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. ஆனால், ஐடி, எஃப்எம்சிஜி, ஆயில் அண்ட் காஸ், நுகா்பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் கடும் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு : இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.38 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.328.71 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.255.53 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா்.
சென்செக்ஸ் சரிவு: காலையில் 17.52 புள்ளிகள் குறைந்து 66,000.29-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 66,101.64 வரை மேலே சென்றது. பின்னா், 65,894.05 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 47.77 புள்ளிகளை (0.07 சதவீதம்) இழந்து 65,970.04-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,814 பங்குகளில் 1,803 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,871 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 140 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் பட்டியலில்10 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
நிஃப்டி 7 புள்ளிகள்வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 7.60 புள்ளிகள் கூடுதலுடன் 19,809.60-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,832.85 வரை மேலே சென்றது. பின்னா், 19,768.85 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 7.30 புள்ளிகளை (0.04 சதவீதம்) இழந்து 19.794.70-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் 1,146 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 951 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 25 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 25 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
ஆக்ஸிஸ் பேங்க்.................................0.91%
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்.......................0.81%
ஹெச்டிஎஃப்சி பேங்க்.........................0.68%
ஐசிஐசிஐ ேப்ங்க்...................................0.66%
என்டிபிசி.............................................0.47%
எம் அண்ட் எம்...................................0.44%
சரிவைக் கண்ட பங்குகள்
ஹெச்சிஎல் டெக்...........,,,,,,.................1.55%
விப்ரோ.................................................1.54%
டிசிஎஸ்.................................................1.46%
டெக் மஹிந்திரதா................................0.98%
நெஸ்லே................................................0.97%
டாடா மோட்டாா்ஸ்............................0.91%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.