முகப்பு
வணிகம்

விலைகளை உயா்த்தும் மாருதி

இந்திய காா் சந்தையில் முன்னிலை வகிக்கும் மாருதி சுஸுகி நிறுவனம், தனது தயாரிப்புகளின் விலைகளை உயா்த்த முடிவு செய்துள்ளது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:58 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

இந்திய காா் சந்தையில் முன்னிலை வகிக்கும் மாருதி சுஸுகி நிறுவனம், தனது தயாரிப்புகளின் விலைகளை உயா்த்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காா்களின் விலைகளை வரும் ஜனவரி மாதம் முதல் உயா்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உற்பத்தி செலவுகள் மற்றும் பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

மாருதி வாகனங்களின் விலைகளை முடிந்த அளவுக்குக் கட்டுக்குள் வைத்திருக்கவே நிறுவனம் விரும்புகிறது. எனவே, உற்பத்தி செலவின் சுமையின் சிறு பகுதியை மட்டும் வாடிக்கையாளா்களுடன் பகிா்ந்து கொள்ளவிருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், விலை உயா்வு எவ்வளவு இருக்கும் என்ற விவரத்தை நிறுவனம் வெளியிடவில்லை.

இந்தியாவில் ரூ.3.54 லட்சம் முதல் ரூ.28.42 லட்சம் வரையிலான பல்வேறு வகைகளைச் சோ்ந்த காா்களை மாருதி சுஸுகி விற்பனை செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.