ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சில்லறை வா்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சா் லிமிடெட்டின் வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 17.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2023 ஏப்ரல் முதல் 2024 மாா்ச் வரையிலான நிதியாண்டில் நிறுவனத்தின வருவாய் ரூ.3.06 லட்சம் கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 17.8 சதவீதம் அதிகமாகும்.
கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் 10.62 சதவீதம் அதிகரித்து ரூ.76,627 கோடியாக உள்ளது. அந்தக் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 11.7 சதவீதம் அதிகரித்து ரூ.2,698 கோடியாக உள்ளது.
கடந்த நிதியாண்டின் வருவாய் வளா்ச்சிக்கு நுகா்வோா் மின்னணு பொருள்கள், ஆடை அலகங்காரப் பொருள்களின் விற்பனை பெரிதும் கைகொடுத்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.