வணிகம்

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

DIN

ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வட்டி வருவாய் கடந்த மாா்ச் காலாண்டில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.2,021 கோடியாக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 57 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனம் ரூ.1,288 கோடியை ஒருங்கிணைந்த நிகர லாபமாக ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர வட்டி வருவாய் 22 சதவீதம் அதிகரித்து ரூ.5,543 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.4,534 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT