வணிகம்

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

DIN

தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டெக் மஹிந்திராவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 41 சதவீதம் சரிந்தது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.661 கோடியாகப் பதிவாகியுள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது சுமாா் 41 சதவீதம் குறைவாகும்.

அதேபோல், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருவாயும் முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 6.2 சதவீதம் குறைந்து ரூ.12,871 கோடியாக உள்ளது.

2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் முந்தைய நிதியாண்டைவிட 51.2 சதவீதம் சரிந்து ரூ.2,358 கோடியாக உள்ளது. வருவாய் 2.4 சதவீதம் குறைந்து ரூ.51,996 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT