கௌதம் அதானி  Din
வணிகம்

அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் சரிவுடன் தொடக்கம்!

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை சரிவு.

DIN

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நிலையில், அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் திங்கள்கிழமை சரிவுடன் தொடங்கியுள்ளது.

அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில், பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தலைவா் மாதவி புரி புச் பங்குகளை வைத்திருந்ததை ஹிண்டன்பர்க் நிறுவனம் சனிக்கிழமை அம்பலப்படுத்தியது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் சரிந்து 79,330 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் சரிந்து, 24,320 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

மேலும், அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் பங்குகளும் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதானி என்ர்ஜி 17 சதவிகிதம், அதானி டோட்டல் கேஸ் 13.39 சதவிகிதம், எண்டிடிவி 11 சதவிகிதம் மற்றும் அதானி பவர் 10.94 சதவிகிதம் சரிவை கண்டுள்ளது.

மேலும், அதானி என்ர்ஜி 6.96%, அதானி வில்மர் 6.49%, அதானி என்டர்பிரைசஸ் 5.43%, அதானி போர்ட் 4.95%, அம்புஜா சிமென்ட்ஸ் 2.53% மற்றும் ஏசிசி 2.42% சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.

ஏற்கெனவே, கடந்தாண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டை எழுப்பி முதன்முதலில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டபோது அந்த குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை கண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT