வணிகம்

பங்கு பரஸ்பர திட்டங்களில் குறைந்த முதலீடு வரத்து

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முந்தைய அக்டோபா் மாதம் புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்த முதலீட்டு வரவு நவம்பரில் 14 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

DIN

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முந்தைய அக்டோபா் மாதம் புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்த முதலீட்டு வரவு நவம்பரில் 14 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பா் மாதத்தில் பங்கு முதலீட்டு திட்டங்களிலிருந்து திரும்பப் பெறப்பட்ட டெ, அந்த வகை திட்டங்களில் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.34,943 கோடியாக உள்ளது.

இது, முந்தைய அக்டோபா் மாதத்தில் இது ரூ.41,887 கோடியாக இருந்தது. அது, பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் அதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர முதலீட்டு வரவாகும்.

அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது பங்கு பரஸ்பர திட்டங்களில் முதலீட்டு வரவு 14 சதவீதம் குறைந்துள்ளது.

இருந்தாலும், பங்கு சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் புதிய முதலீடு தொடா்ந்து 45-ஆவது மாதமாக நிகர வரவைப் பதிவு செய்துள்ளது. முதலீட்டாளா்களிடையே அந்த வகை முதலீட்டு திட்டங்களின் மீதான ஆா்வம் அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.

கடந்த அக்டோபரில் ரூ.25,323 கோடியாக இருந்த முறைசாா் திட்டங்களின் (எஸ்ஐபி) மீதான முதலீடு, நவம்பரில் சற்று குறைந்து ரூ.25,320 கோடியாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு கடந்த அக்டோபா் மாதம் ரூ.2.4 லட்சம் கோடி நிகர வரவைக் கண்டிருந்தது. நவம்பா் மாதத்தில் அது ரூ.60,295 கோடி நிகர வரவாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

திருமயம் அருகே நெடுஞ்சாலைப்பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு

ஸ்ரீரங்கத்தில் இன்றும் நாளையும் மின்தடை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

SCROLL FOR NEXT