வணிகம்

டெக் மஹிந்திரா நிகர லாபம் 23% உயா்வு

தகவல் தொடா்பு சேவை நிறுவனமான டெக் மஹிந்திராவின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் 23 சதவீதம் உயா்ந்துள்ளது.

DIN

மும்பை, ஜூலை 25: தகவல் தொடா்பு சேவை நிறுவனமான டெக் மஹிந்திராவின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் 23 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.851 கோடியாகப் பதிவாகியுள்ளது.இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகம். நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டைவிட 1.2 சதவீதம் குறைவாகவும் முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டைவிட 1 சதவீதம் அதிகமாகவும் ரூ.13,005 கோடியாகப் பதிவாகியுள்ளது.மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு 1.90 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் இலாகா ஒதுக்ப்படதாத அமைச்சா்: ஜான்குமாா் தொகுதிப்பணிகள் குறித்துஆய்வு

சிறுபான்மையினரின் பிரச்னைகளை அறிய மாநிலம் முழுவதும் ஆய்வு: ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண்

பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

கோவையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

காலமானாா் ஓ.எம்.துரைசாமி

SCROLL FOR NEXT