ஜார்க்கண்ட் மாநிலம் கோடெர்மாவில் 1600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க தாமோதர் வேலி கார்ப்பரேஷன் இடமிருந்து ரூ.13,300 கோடி ஆர்டரை பொதுத்துறை நிறுவனமான பெல் பெற்றுள்ளது.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் குறிக்கோளுக்கு ஏற்ப, ஜார்க்கண்டில் உள்ள கோடெர்மாவில் 2x800 மெகாவாட் திறன் படைத்த அனல் மின் நிலையம் அமைக்கவும், கொள்முதல் மற்றும் கட்டுமான தொகுப்புக்கான டெண்டரை தாமோதர் வேலி கார்ப்பரேஷன் ஜூன் 26, 2024 அன்று பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் உடன் இறுதி செய்துள்ளது என்று மின்சார அமைச்சகம் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டின் மூலம், உள்ளூர் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கம் ஏற்படும் வேளையில் மக்களும் பயன்பெறுவர். அதே நேரத்தில் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் நிறுவனத்தால் நிறுவப்பட்டும் அனல் மின் உற்பத்தி நிலையமானது 2030 க்குள் 8140 மெகாவாட்ட வரை மின் தயாரிக்கும் திறன் படைத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.