நிதியாண்டில் புதிதாக 100 கிளைகள்: கரூர் வைஸ்யா வங்கியின் திட்டம்!
நாடு முழுவதும் 100 புதிய கிளைகளை திறக்க திட்டம்: கரூர் வைஸ்யா வங்கி
தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கி நடைபெறும் நிதியாண்டில் நாடு முழுவதும் 100 புதிய கிளைகளை திறக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக வங்கியின் மேல்மட்ட அதிகாரி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியின் 840-வது கிளை அயோத்தியில் வங்கியின் தலைவர் மீனா ஹேமசந்திராவால் தொடங்கிவைக்கப்பட்டது.
அதனையடுத்து வங்கி மேலாண்மை இயக்குநரும் சிஇஓவுமான பி.ரமேஷ் பாபு, கேவிபி இந்த நிதியாண்டில் 39 கிளைகளை திறந்துள்ளதாகவும் மேலும் 100 புதிய கிளைகள் தொடங்க திட்டம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆண்டு இலாபமாக ரூ.1,605 கோடி கடந்த நிதியாண்டில் ஈட்டப்பட்டிருப்பதாகவும் நிகர செயல்படாத சொத்துக்கள் (என்பிஏ) 0.40 சதவிகிதம் அளவுக்கு குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கரூர் வைஸ்யா வங்கி நிலையான வளர்ச்சி விகிதம் கொண்டிருப்பதாக ரமேஷ் பாபு குறிப்பிட்டார்.