சென்னை: வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தனது ஃபாஸ்ட்-சார்ஜிங் (இ.வி) மையங்களையும் சென்னையில் திறந்துள்ளது. மேலும் இது போன்ற 100 (இ.வி.) சார்ஜிங் நிலையத்தை தமிழகம் முழுவதும் நிறுவுவதற்கான இலக்கில் இறங்கியுள்ளது ஹூண்டாய்.
150 கிலோவாட் மற்றும் 30 கிலோவாட் இணைப்பிகளை உள்ளடக்கிய 180 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தை, சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் அமைத்துள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இவற்றில் ஹூண்டாய் எலக்ட்ரிக் காரை தவிர, மற்ற பிராண்ட் எலக்ட்ரிக் கார்களையும் சார்ஜ் செய்யலாம்.
இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார்ஸ் தனது 28 ஆண்டை கொண்டாடும் வகையில், சென்னையில் எங்களது முதல் 180 கிலோவாட், பொது சார்ஜிங் நிலையத்தை திறந்து வைப்பதில் நாங்கள் பெறும் மகிழ்ச்சியடைகிறோம். இது ஹூண்டாயின் மனிதநேயத்திற்கான முன்னேற்றம் என்ற பார்வைக்கு இணங்க, அனைத்து இ.வி. பயனர்களின் வசதியையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், அதே வேளையில், எங்கள் சார்ஜிங் நிலையங்களை எந்தவொரு இ.வி. வாகனம் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும், மாநிலம் முழுவதும் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கும் தமிழ்நாடு முழுவதும் 100 சார்ஜிங் நிலையங்களை நிறுவ ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் திட்டமிட்டுள்ளது என்று கார்ப்பரேட் திட்டமிடல் நிர்வாக இயக்குநர் ஜே வான் ரியு தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், மை ஹூண்டாய் செயலி மூலம் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம் என்கிறது ஹூண்டாய். அந்த வரிசையில் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக தற்போது ஒன் ஸ்டாப் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மை ஹூண்டாய் என்ற இந்த ஆப் மூலம் தாங்கள் வைத்திருக்கும் கார்கள் தொடர்பான விபரங்கள் மற்றம் விளக்கங்கள் உள்ளிட்ட சேவைகளை வாடிக்கையாளர்கள் எளிதில் பெற்றுக் கொள்ள முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.