வணிகம்

ஹுண்டாய் பங்கு வெளியீட்டுக்கு செபி அனுமதி

தென் கொரிய வாகனத் தயாரிப்பாளரான ஹூண்டாயின் இந்தியப் பிரிவான ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் அனுமதி கிடைத்துள்ளது.

DIN

தென் கொரிய வாகனத் தயாரிப்பாளரான ஹூண்டாயின் இந்தியப் பிரிவான ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் அனுமதி கிடைத்துள்ளது.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை கூறியதாவது:தனது 14,24,94,700 பங்குகளை பொது பங்குச் சந்தையில் விற்பனைக்கு வெளியிடுவதற்காக ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் விண்ணப்பத்திருந்தது.

இந்த விண்ணப்பத்துக்கு செபி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு இந்திய தொழில்துறைக்கு மிக முக்கியமான மைல்கல்லாக இருக்கும்.

சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்னா் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்குப் பிறகு, பெரிய வாகன நிறுவனம் ஒன்று பொதுப் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி பெற்றுள்ளது இதுவே முதல்முறை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT