முகப்பு
தற்போதைய செய்திகள்

பங்குச் சந்தை உயர்வுடன் வர்த்தகமாகிறது!

சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு...

Updated On : 8 ஏப்ரல், 2025 at 10:45 AM
பகிர்:

மும்பை: மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் செவ்வாய்க்கிழமை(ஏப். 8) காலை உயர்ந்து வர்த்தகமாகிறது.

வாரத்தின் இரண்டாம் வணிக நாளான இன்று காலை நிலவரப்படி, சென்செக்ஸ் 1,283.75 புள்ளிகள் (1.75 சதவீதம்) உயர்வுடன் 74,421.65-இல் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 415.95 புள்ளிகள் (1.87 சதவீதம்) உயர்வுடன் 22,577.55-இல் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்காவில் வா்த்தக பதற்றம் மற்றும் வளா்ந்து வரும் பொருளாதார மந்தநிலை கவலைகளால் உலகளாவிய சந்தை வீழ்ச்சியைத் தொடா்ந்து, திங்களன்று உள்நாட்டுச் சந்தையும் கடும் சரிவை எதிா்கொண்டது.

Advertisement

மும்பை பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.14.28 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பங்குச் சந்தை இன்று சரிவிலிருந்து மீண்டு வர்த்தகமாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.