வணிகம்

அட்சயத் திருதியை: தங்கமயில் ஜுவல்லரியில் சிறப்பு விற்பனை

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான தங்கமயில் ஜுவல்லரியில் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

சென்னை: அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான தங்கமயில் ஜுவல்லரியில் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மதுரையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம், தமிழகம் முழுவதும் 62 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 30 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளா்களைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு நிறுவனம் வரும் புதன்கிழமை (ஏப். 30) காலை 6 மணி முதல் சிறப்பு விற்பனையைத் தொடங்க உள்ளது. அப்போது நகைகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளா்களுக்கும் லட்சுமி குபேர பூஜை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு கிராம் தங்கத்துக்கும் ரூ.200 முதல் 400 வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வாங்கும் வெள்ளி, வெள்ளி நகைகள் மற்றும் பரிசு பொருள்களுக்கு ரூ,2,500 முதல் ரூ.10,000 வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மேலும், வைரம் காரட்டுக்கு ஒரு கிராம் முதல் 3 கிராம் வரை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT