டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!
தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் வர்த்தக கட்டண நிச்சயமற்ற தன்மையால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவடைந்தது.
மும்பை: தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் வர்த்தக கட்டண நிச்சயமற்ற தன்மையால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவடைந்தது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் கட்டணங்கள் உலகளாவிய வர்த்தகத்தில் மிகப் பெரிய இடையூறு சந்தித்து வருவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.21 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.87.70 ஐ தொட்ட நிலையில், முடிவில் 52 காசுகள் சரிந்து ரூ.87.70-ஆக முடிவடைந்தது.
Advertisement
Advertisement
இன்றைய வர்த்தக அமர்வின் முடிவில், இந்திய ரூபாய் 52 காசுகள் சரிந்து 87.70 ஆக நிலைபெற்றது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 02) அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 47 காசுகள் உயர்ந்து ரூ.87.18 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!
The rupee depreciated 52 paise to close at 87.70 against the US dollar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.